நிதி ஆயோக் அமைப்பானது, நிதி ஆயோக் வர்த்தகக் கண்காணிப்பு காலாண்டு அறிக்கையை புது டெல்லியில் வெளியிட்டுள்ளது.
2025 ஆம் நிதியாண்டின் ஜூலை முதல் செப்டம்பர் மாதம் வரையிலான இரண்டாவது காலாண்டிற்கான காலாண்டு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
2023 ஆம் ஆண்டின் இதே காலக் கட்டத்துடன் ஒப்பிடும்போது 2024 ஆம் ஆண்டு ஏப்ரல்-செப்டம்பர் மாதங்களில் இந்தியாவின் மொத்த வர்த்தகமானது சுமார் 5.67 சதவீதம் வளர்ந்துள்ளதாக அறிக்கை எடுத்துக்காட்டுகிறது.
இதன்படி ஏற்றுமதிகளானது ஆண்டிற்கு சுமார் 5.23 சதவீதம் அதிகரித்துள்ளதுடன், இறக்குமதிகள் ஆண்டிற்கு 6.07 சதவீதம் அதிகரித்து வருகின்றன.
கடந்த ஆறு மாதங்களில், மாதத்திற்கு என சராசரியாக 35.4 பில்லியன் டாலர்கள் என்ற மதிப்பில் நாட்டின் சரக்கு ஏற்றுமதி மிக நிலையானதாக உள்ளது என்றும் அறிக்கை கூறுகிறது.
ஆகஸ்ட் மாதத்தில் ஏற்பட்ட அதிகரிப்பைத் தவிர, இறக்குமதிகள் ஆனது சராசரியாக 57.8 பில்லியன் டாலர்களாக இருந்தன.