மத்திய வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சகம் வர்த்தகத் துறையில் (Department of Commerce) வர்த்தகத் தீர்வுகளுக்கான தலைமை இயக்குநரகம் என்ற பதவியை உருவாக்குவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக, இந்திய அரசு (அரசு நடவடிக்கைகள் ஒதுக்கீடு) விதிகள் 1961ல் திருத்தங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.
விலைபொருட்களை பதுக்கி வைத்தலுக்கு எதிரான நடவடிக்கைகள், குறிப்பிட்ட பொருட்கள் மீது இறக்குமதி வரியை விதித்தல், பாதுகாப்பு நடவடிக்கைகள் உட்பட அனைத்து வர்த்தக குறைதீர்ப்பு நடவடிக்கைகளை நிர்வகிப்பதற்கான உச்சபட்ச தேசிய அளவிலான ஆணையமாக இது செயல்படும்.
பதுக்கல் எதிர்ப்பு மற்றும் அது தொடர்பான நடவடிக்கைகளுக்கான தலைமை இயக்குநரகம், பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கான தலைமை இயக்குநரகம் (DGS) மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் (QR) ஆகியவை ஒன்றிணைக்கப்பட்டு ஒரே தனித்த அமைப்பாக மாற்றப்பட்டுள்ளது.