TNPSC Thervupettagam

வர்த்தகம் மற்றும் மேம்பாட்டு அறிக்கை 2022

October 12 , 2022 650 days 315 0
  • ஐக்கிய நாடுகளின் வர்த்தகம் மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பானது அதன் வருடாந்திர வர்த்தகம் மற்றும் மேம்பாட்டு அறிக்கையை வெளியிட்டது.
  • இது 2022 ஆம் ஆண்டில் உலகப் பொருளாதாரம் 2.6% அளவிற்கு வளர்ச்சி அடையும் என எதிர்பார்க்கிறது.
  • இது கடந்த ஆண்டு திட்டமிடப்பட்ட விகிதத்தை விட 0.9 சதவீதப் புள்ளிகள் அளவிற்குக் குறைவாகும்.
  • 2023 ஆம் ஆண்டில் வளர்ச்சி 2.2% ஆக மேலும் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
  • பிராந்தியத்தின் மிகப்பெரியப் பொருளாதாரமான இந்தியப் பொருளாதாரம் 2022 ஆம் ஆண்டில் 5.7% மற்றும் 2023 ஆம் ஆண்டில் 4.7% வளர்ச்சி அடையும் என அறிக்கை எதிர்பார்க்கிறது.
  • 2022 ஆம் நிதியாண்டில் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 8.7% வளரும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்