22வது சட்ட ஆணையம் ஆனது, தகவல் அளிப்போருக்கான பாதுகாப்பு, கட்டாய உரிமம், அரசு பயன்பாடு மற்றும் பொது நலன் ஆகியவை தொடர்பான பல்வேறு விதி விலக்குகளுடன் வர்த்தக ரகசியங்களைப் பாதுகாப்பதற்காக என்று புதியச் சட்டத்தை அறிமுகப் படுத்துவதற்குப் பரிந்துரைத்துள்ளது.
நீதிபதி ரிது ராஜ் அவஸ்தி தலைமையில் 22வது சட்ட ஆணையம் அமைக்கப்பட்டது.
வர்த்தக இரகசியங்கள் என்பது விற்கப்படும் அல்லது உரிமம் பெற்ற இரகசியத் தகவல்களின் அறிவுசார் சொத்துரிமைகள் ஆகும்.
அவை இரகசியமாக வைக்கப்படுவதால் அவை உயர் மதிப்பைப் பெறுகின்றன.
தற்போது, வர்த்தக இரகசியங்களைப் பாதுகாப்பதற்கான ஒரு குறிப்பிட்ட சட்டம் இந்தியாவில் இல்லை.
அதற்கு மாறாக, ஒப்பந்தங்கள், பொதுச் சட்டம், குற்றவியல் சட்டம் மற்றும் நம்பிக்கை மற்றும் சமபங்கு மீறல் கொள்கைகளை நிர்வகிக்கும் பொதுச் சட்டங்களின் கீழ் அவை பாதுகாக்கப் படுகின்றன.