தென்கொரியத் தலைநகர் சியோலில் நடைபெற்று வரும் ASEM எனும் ஆசிய – ஐரோப்பிய நாடுகளுக்கான பொருளாதர அமைச்சர்களின் சந்திப்பில் (Asia–Europe Meeting - ASEM) உலக பொருளாதார நிலையை ஊக்குவிக்க சேவைத்துறையிலுள்ள முழுத்திறனையும் பயன்படுத்துவதற்கான அழைப்பை இந்தியா விடுத்துள்ளது.
இதற்காக சேவைத்துறையில் வர்த்தக எளிதாக்கலுக்கான (TFS – Trade Facilitation in Service) உலக ஒப்பந்தத்தை (Global pact on TFS) இந்தியா முன்மொழிந்துள்ளது.
உலக சேவைத்துறையின் வர்த்தக வளர்ச்சிக்காக குறுகியகால பணிகளுக்கு திறனுடைய பணியாளர்களை எல்லை கடந்து பணியமர்த்துதல் உட்பட பல்வேறு வர்த்தக எளிதாக்குதல் கூறுகளை உடைய இந்த TFS முன்மொழிவை இந்தியா ஏற்கனவே உலக வர்த்தக அமைப்பில் (WTO) சமர்ப்பித்துள்ளது.