TNPSC Thervupettagam

வர்த்தக மேம்பாடு மற்றும் ஊக்குவிப்பு கவுன்சில்

January 7 , 2018 2516 days 753 0
  • வர்த்தக மேம்பாடு மற்றும் ஊக்குவிப்பு கவுன்சிலின் (Council for Trade Development & Promotion) 3-வது சந்திப்பு அண்மையில் புது டெல்லியில் நடைபெற்றது.
    • மாநிலங்களில் சர்வதேச அளவிலான வர்த்தகங்கள் மேற்கொள்வதற்கு இயைந்த சூழலமைவை ஏற்படுத்துதல்,
    • இந்தியாவின் ஏற்றுமதியை ஊக்குவிப்பதில் செயல்தன்மையுடைய பங்காளர்களாக மாநிலங்களை உருவாக்குவதற்கான கட்டமைப்பை ஏற்படுத்துதல்

 போன்றவற்றிற்குத் தேவையான நடவடிக்கைகளைப் பற்றி மாநில அரசுகளிடமும்,  யூனியன் பிரதேசங்களிடமும் தொடர்ச்சியான பேச்சுவார்த்தை தொடர்புகளை வைத்துக் கொள்ளுதலை உறுதிபடுத்துவதற்காகவே இச்சந்திப்பு மேற்கொள்ளப்படுகின்றது.

இக்கவுன்சிலின் உறுப்பினர்கள்

  • மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் வர்த்தக அமைச்சர்கள்
  • மொத்தம் 14 மத்திய அரசுச் செயலாளர்கள் (வர்த்தகம், வருவாய்,  கப்பல் போக்குவரத்து,  விமான சேவை,  வேளாண்மை,  உணவுப் பதப்படுத்துதல்,  பொருளாதாரம் உட்பட).
  • 2015-20ஆம் ஆண்டிற்கான வெளிநாட்டு வர்த்தக கொள்கை அறிக்கையின் கூறுகளின் படி, மத்திய வர்த்தகம் மற்றும் தொழிற்துறை அமைச்சரின் தலைமையின் கீழ் 2015ல் வர்த்தக மேம்பாடு மற்றும் ஊக்குவிப்பு கவுன்சில் அமைக்கப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்