TNPSC Thervupettagam

வறட்சி குறித்த சிறப்பு அறிக்கை 2021

June 22 , 2021 1126 days 611 0
  • பேரிடர் அபாயக் குறைப்பு குறித்த உலகளாவிய அறிக்கைவறட்சி குறித்த சிறப்பு அறிக்கை 2021” என்று தலைப்பிடப்பட்ட ஒரு அறிக்கையானது சமீபத்தில் வெளியிடப் பட்டது.
  • இந்த அறிக்கையானது ஐக்கிய நாடுகள் அமைப்பின் பேரிடர் அபாயக் குறைப்பு அலுவலகத்தினால் வெளியிடப் படுகிறது.
  • இது உறுப்பினர்கள் மாநாடு 26 எனப்படும் முக்கியத்துவம் வாய்ந்த ஐ.நா. பருவநிலை பேச்சுவார்த்தையின் ஓர் அங்கமாகும்.
  • உறுப்பினர்கள் மாநாடு 26 ஆனது 2021 ஆம் ஆண்டின் நவம்பர் மாதத்தில் ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோவில் நடைபெற உள்ளது.
  • வறட்சியானது, எந்த ஓர் அவசர நடவடிக்கையும் எடுக்காவிட்டால் அடுத்த பெருந் தொற்றாக மாறக் கூடிய ஒரு மறைமுகமான உலக நெருக்கடியாக திகழும் என்று இந்த அறிக்கையில் குறிப்பிடப் பட்டுள்ளது.
  • இந்த நூற்றாண்டில் சுமார் 1.5 பில்லியன் மக்கள் வறட்சியினால் நேரடியாக பாதிக்கப் பட்டுள்ளனர்.
  • பொருளாதார இழப்பானது தோராயமாக 124 பில்லியன் டாலராக கணக்கிடப் பட்டு உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்