TNPSC Thervupettagam

வறண்டு கொண்டிருக்கும் வடகிழக்கு இந்தியா

May 5 , 2019 1903 days 650 0
  • இந்தியாவின் ஈரப்பதம் மிக்க பகுதிகளில் வடகிழக்கு இந்தியாவும் ஒன்றாகும்.
  • ஆனால் இது கடந்த 30 ஆண்டுகளாக மிக வேகமாக வறண்டு கொண்டிருக்கின்றது.
  • புனேவில் உள்ள இந்திய வெப்பமண்டல வானிலையியல் நிறுவனம் மற்றும் அஸ்ஸாம் பல்கலைக்கழகம் ஆகியவற்றைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் இதற்கான காரணத்தை ஆய்வு செய்தனர்.
  • குறைந்த பருவ மழைப் பொழிவானது துணை வெப்பமண்டலப் பசிபிக் கடலின் இயற்கை மாற்றங்களுடன் தொடர்புடையது என்று அவர்கள் கூறியுள்ளனர்.
பத்தாண்டு கால பசிபிக் அலைவுகள்
  • பத்தாண்டு கால பசிபிக் அலைவுகள் (PDO - Pacific decadal oscillation) என்பது குறிப்பாக வட பசிபிக் கடலில் நிகழும் அலைவுகளின் அமைப்பாகும்.
  • இது வடகிழக்கு இந்தியாவின் கோடைக்கால பருவமழைப் பொழிவைப் பாதிக்கின்றது.
  • PDO என்பது எல்நினோ, லா நினோவைப் போன்ற ஒரு கடல் நிகழ்வாகும்.
  • ஆனால் இதன் தாக்கமானது பத்தாண்டு காலத்திற்கு நீடிக்கின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்