வறுமை ஒழிப்பிற்கான சர்வதேச தினமானது ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 17 அன்று அனுசரிக்கப்படுகின்றது.
1992 ஆம் ஆண்டில், பாதிரியார் ஜோசப் ரெசின்ஸ்கியின் நினைவாக ஐக்கிய நாடுகள் சபையானது அக்டோபர் 17 ஆம் தேதியை வறுமை ஒழிப்பு தினமாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
இவர் 1987 ஆம் ஆண்டில் முதன்முதலில் இந்த நாளைத் தொடங்கி, தனது வாழ்நாள் முழுவதும் வறுமை மற்றும் சமூக விலக்கிற்கு எதிராகப் போராடினார்.
உலகளாவிய கடுமையான வறுமை விகிதங்கள் 1990 ஆம் ஆண்டில் 36 சதவீதத்திலிருந்து 2018 ஆம் ஆண்டில் 8.6 சதவீதமாகக் குறைந்துள்ளது.
2019 ஆம் ஆண்டிற்கான கருப் பொருள், “வறுமையை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு குழந்தைகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் சமூகங்களுக்கு அதிகாரம் அளிப்பதற்காக ஒன்றிணைந்து செயல்படுவது” என்பதாகும்.