TNPSC Thervupettagam

வறுமை, செழிப்பு மற்றும் கோள் அறிக்கை 2024

October 30 , 2024 31 days 82 0
  • உலக வங்கியானது, சமீபத்தில் ‘வறுமை, செல்வச் செழிப்பு மற்றும் கோள்: பல்வேறு நெருக்கடியிலிருந்து வெளி வருவதற்கான பல வழிமுறைகள்’ என்ற ஒரு அறிக்கையை வெளியிட்டு ள்ளது.
  • உலக மக்கள்தொகையில் சுமார் பாதி பேர் (44%) - சுமார் 3.5 பில்லியன் மக்கள் – தற்போது ஒரு நாளைக்கு 6.85 டாலருக்கும் குறைவான வருமானத்தில் வாழ்கின்றனர்.
  • உலக மக்கள்தொகையில் 8.5% பேர் (சுமார் 700 மில்லியன் மக்கள்) தற்போது ஒரு நாளுக்கு சுமார் 2.15 டாலருக்கும் குறைவான வருமானத்தில் கடுமையான வறுமை நிலையில் வாழ்கின்றனர்.
  • உலக வங்கியின் கூற்றுப் படி, கடுமையான வறுமையில் உள்ளவர்கள் என்போர் ஒரு நாளைக்கு 2.15 டாலருக்கும் குறைவான வருமானத்தில் வாழ்பவர்கள் ஆவர்.
  • 2024 ஆம் ஆண்டில், ஆப்பிரிக்காவின் துணை-சஹாரா பகுதியானது உலக மக்கள் தொகையில் சுமார் 16% பங்கினைக் கொண்டிருந்தாலும், அதில் 67% பேர் கடுமையான வறுமை நிலையில் வாழ்கின்றனர்.
  • 1990 ஆம் ஆண்டில் 431 மில்லியனாக இருந்த கடுமையான வறுமை நிலையில் வாடும் இந்தியர்களின் எண்ணிக்கையானது 2024 ஆம் ஆண்டில் 29 மில்லியன் ஆக உள்ளது.
  • சுமார் 622 மில்லியன் மக்கள் (உலக மக்கள்தொகையில் 7.3%) 2030 ஆம் ஆண்டில் கடுமையான வறுமை நிலையில் வாழ்வார்கள் என்று கணிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்