வறுமை மற்றும் பகிரப்பட்ட வளம் 2022 - சரிசெய்யும் நடைமுறை
October 12 , 2022 776 days 464 0
உலக வங்கியானது “வறுமை மற்றும் பகிரப்பட்ட வளம் 2022 - சரிசெய்யும் நடைமுறை” என்ற தலைப்பில் ஒரு அறிக்கையை வெளியிட்டது.
2015 ஆம் ஆண்டிலிருந்து உலகளாவிய வறுமைக் குறைப்பு நடைமுறையின் வேகம் குறைந்து வருகிறது.
2015 ஆம் ஆண்டு வாக்கில், உலகளாவிய தீவிர-வறுமை விகிதம் பாதிக்கு மேல் குறைக்கப் பட்டது.
2020 ஆம் ஆண்டில் மட்டும், தீவிர வறுமைக் கோட்டின் கீழ் வாழும் மக்களின் எண்ணிக்கை 70 மில்லியனுக்கும் அதிகமாக உயர்ந்துள்ளது.
1990 ஆம் ஆண்டில் உலகளாவிய வறுமைக் கண்காணிப்பு தொடங்கியதில் இருந்து இது ஒரு வருடத்தில் ஏற்பட்ட மிகப்பெரிய அதிகரிப்பாகும்.
தற்போதையப் போக்குகளின் அடிப்படையில், 574 மில்லியன் மக்கள் (உலக மக்கள் தொகையில் கிட்டத்தட்ட 7%) 2030 ஆம் ஆண்டில் ஒரு நாளைக்கு 2.15 டாலருக்கும் குறைவான வருமானத்தில் வாழ்கின்ற நிலையில், இதில் பெரும்பாலானவர்கள் ஆப்பிரிக்காவில் உள்ளனர்.
2011 ஆம் ஆண்டை விட 2019 ஆம் ஆண்டில் இந்தியாவில் தீவிர வறுமை 12.3% புள்ளிகள் குறைவாக இருந்தது.
2011 ஆம் ஆண்டில் 22.5% ஆக இருந்த வறுமையின் உள்ளவர்களின் எண்ணிக்கை 2019 ஆம் ஆண்டில் 10.2% ஆகக் குறைந்துள்ளது.
2011 ஆம் ஆண்டில் 26.3% ஆக இருந்த கிராமப்புற வறுமை 2019 ஆம் ஆண்டில் 11.6% ஆகக் குறைந்ததால், நகர்ப்புற இந்தியாவுடன் ஒப்பிடும் போது கிராமப்புறங்களில் வறுமைக் குறைப்பு அதிகமாக இருந்தது.
இதே காலக் கட்டத்தில் நகர்ப்புறங்களில் வறுமையின் சரிவு 14.2% என்ற அளவிலிருந்து 6.3% ஆக இருந்தது.