தமிழ்நாடு சிமெண்ட் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனமானது (Tamil Nadu Cement CorporationLimited – TANCEM) ஏற்கனவே உள்ள ‘அரசு’ (Arasu) எனும் தயாரிப்போடு கூடுதலாக “வலிமை” (சிமெண்ட்) என்ற புதிய தயாரிப்பினை அறிமுகப்படுத்த உள்ளது.
TANCEM என்பது ஒரு மாநிலப் பொதுத்துறை அலகாகும்.
அதே போன்று தமிழ்நாடு உப்பு கார்ப்பரேஷன் நிறுவனமும் ‘நெய்தல்’ என்ற தயாரிப்புப் பெயரின் கீழ் அயோடின் கலந்த படிக உப்பு, சுத்திகரிக்கப்பட்ட அயோடின் கலந்த உப்பு மற்றும் இரட்டிப்பு இரும்பு மற்றும் அயோடின் செறிவூட்டப்பட்ட உப்பினை அறிமுகப்படுத்த உள்ளது.