TNPSC Thervupettagam

வலுவான எல் நினோ 2023-24

March 10 , 2024 259 days 304 0
  • இது வரை பதிவு செய்யப்பட்ட ஐந்து வலிமையான எல் நினோ நிகழ்வுகளில் ஒன்றாக 2023-24 ஆம் ஆண்டு எல் நினோ நிகழ்வு பதிவாகியுள்ளது.
  • இது ஒரு பலவீனமான போக்காக இருக்கும் போதிலும், வரும் மாதங்களில் உலகளாவிய பருவநிலையை தொடர்ந்து பாதிக்கும்.
  • 2023 ஆம் ஆண்டானது இதுவரையில் பதிவு செய்யப்பட்ட வெப்பமான ஆண்டாக உள்ள நிலையில், தற்போது நிலவி வரும் எல் நினோ சூழ்நிலைகள், உலகெங்கிலும் அதிக பட்ச வெப்பநிலை மற்றும் தீவிர நிகழ்வுகளைத் தூண்டியுள்ளது.
  • இது கிழக்கு மற்றும் மத்திய வெப்பமண்டல பசிபிக் பெருங்கடல் பகுதிகளில், 1991 முதல் 2020 ஆம் ஆண்டு வரையில் பதிவான சராசரி கடல் மேற்பரப்பு வெப்பநிலையை விட சுமார் 2.0 டிகிரி செல்சியஸ் என்ற உச்ச மதிப்பைப் பதிவு செய்துள்ளது.
  • இதனால் இந்த ஆண்டு எல் நினோ நிகழ்வானது, 1997-98 மற்றும் 2015-2016 ஆகிய ஆண்டுகளில் பதிவான எல் நினோ நிகழ்வுகளை விட பலவீனமானதாக இருந்தாலும், ஐந்து வலுவான எல் நினோ நிகழ்வுகளில் இதுவும் ஒன்றாக பதிவாகியுள்ளது.
  • உலக சராசரி வெப்பநிலையானது ஜனவரி மாதத்தில் முதல் முறையாக ஓராண்டு முழுவதிற்குமான 1.5 டிகிரி செல்சியஸ் என்ற வெப்பநிலை வரம்பை விஞ்சியது.
  • 2023 ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் ஒவ்வொரு மாதமும் ஒரு புதிய மாதாந்திர அதிக பட்ச வெப்பநிலை பதிவாகியுள்ளது என்பதோடு 2023 ஆம் ஆண்டானது இதுவரையில் பதிவு செய்யப்பட்ட வெப்பமான ஆண்டாகும்.
  • எல் நினோ என்பது மத்திய மற்றும் கிழக்கு வெப்பமண்டல பசிபிக் பெருங்கடல்களின் மேற்பரப்பில் அவ்வப்போது பதிவாகும் வெப்பமயமாதல் நிகழ்வு ஆகும்.
  • சராசரியாக இரண்டு முதல் ஏழு ஆண்டுகளுக்கு ஒரு முறை நிகழ்கின்ற இந்த நிகழ்வு  பொதுவாக ஒன்பது முதல் 12 மாதங்கள் வரை நீடிக்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்