TNPSC Thervupettagam

வலுவான சூரிய துகள் வெளியீட்டு நிகழ்வு

July 16 , 2024 131 days 207 0
  • சமீபத்தில், செவ்வாய்க் கிரகமானது ஒரு மிகவும் வலுவான சூரிய துகள் நிகழ்வின் தாக்கத்திற்கு உட்பட்டது.
  • செவ்வாய்க் கிரகத்தின் மேற்பரப்பைத் தாக்கும் சூரியத் துகள்களால் வெளிப்படும் கதிர்வீச்சு, ஒரு மார்பக ஊடுகதிர் ஆய்வின் கதிர்வீச்சினை விட 30 மடங்கு அதிகமாக இருந்தது.
  • சூரியன் தனது மேற்பரப்பில் இருந்து நேரடியாகப் புரோட்டான்களை வெளியிடும் நிகழ்வானது வலுவான சூரிய துகள் வெளியீட்டு நிகழ்வு ஆகும்.
  • பூமியின் காந்தப்புலம் ஆனது, சூரியன் உமிழும் கதிர்வீச்சுகளைத் திசைதிருப்பும் வகையிலான ஒரு பாதுகாப்புக் கவசமாகச் செயல்படுகிறது.
  • வலுவான சூரிய துகள் வெளியீட்டு நிகழ்வானது, ஓராண்டிற்கும் மேலான ஒரு காலக் கட்டத்தில் ஓசோன் அளவைக் குறைக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்து உள்ளனர்.
  • ஒரு வலுவான சூரிய துகள் வெளியீட்டு நிகழ்வானது பொதுவாக 1,000 ஆண்டுகளுக்கு ஒரு முறை நிகழும்.
  • பதிவுகளின் படி, சமீபத்திய வலுவான சூரிய துகள் வெளியீட்டு நிகழ்வு ஆனது கி.பி 993 ஆம் ஆண்டில் பதிவு செய்யப் பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்