TNPSC Thervupettagam

வல்லூறுகள் பாதுகாப்பிற்கான தேசிய செயல் திட்டம் – 2020/2025

October 30 , 2020 1362 days 601 0
  • வல்லூறுகள் பாதுகாப்பிற்கான தேசிய செயல் திட்டம் 2020-25 என்ற ஒரு திட்டமானது சமீபத்தில் தேசிய வனவிலங்கு வாரியத்தினால் ஒப்புதல் அளிக்கப் பட்டது.
  • உத்தரப் பிரதேசம், திரிபுரா, மகாராஷ்டிரா, கர்நாடகா, தமிழ்நாடு ஆகியவை ஒவ்வொன்றும் ஒரு வல்லூறுப் பாதுகாப்பு மற்றும் இனப்பெருக்க மையத்தைப் பெற உள்ளன.
  • இந்தப் புதிய திட்டமானது ஒரு மருந்து வல்லூறுவிற்கு நச்சு எனக் கண்டறியப் பட்டால் அதன் மருத்துவப் பயன்பாட்டை தானாகவே நீக்கி விடுகின்றது.
  • இந்தியாவில் வல்லூறுகள் அழிந்து வருவதற்கு ஒரு மிக முக்கியக் காரணம் டைக்ளோபினாக் என்ற ஒரு மருந்தாகும்.
  • இந்தத் திட்டத்தின் கீழ், ஒவ்வொரு மாநிலமும் அம்மாநிலத்தில் உள்ள எஞ்சியுள்ள வல்லூறுகளைப் பாதுகாப்பதற்காக குறைந்தது 1 வல்லூறுப் பாதுகாப்பு மண்டலத்தையாவது கொண்டிருக்க வேண்டும்.
  • ஒருங்கிணைக்கப்பட்ட தேசிய அளவிலான வல்லூறுகளின்  கணக்கெடுப்பானது பம்பாய் இயற்கை வரலாற்றுச் சமூகம், வனத்துறை, இலாப நோக்கற்ற அமைப்புகள், ஆராய்ச்சி மையம் போன்றவற்றினால் மேற்கொள்ளப் படுகின்றது.
  • சிவப்புத் தலை கொண்ட கழுகுகள் மற்றும் எகிப்தியக்  கழுகுகள் போன்றவற்றிற்கு பாதுகாப்பு இனப்பெருக்க மையங்கள் இருக்க வேண்டும்.
  • பிஞ்சோர் (ஹரியானா), போபால் (மத்தியப் பிரதேசம்), குவஹாத்தி (அசாம்), ஹைதராபாத் (தெலுங்கானா) ஆகியவற்றில் 4 மீட்பு மையங்களை உருவாக்க வேண்டும்.
  • இந்தியாவில் 9 வகையான வல்லூறு இனங்கள் உள்ளன.
  • அந்த 9 வகையான வல்லூறு இனங்கள் மற்றும் அவற்றின் ஐயூசிஎன் (IUCN) நிலை பின்வருமாறு:
    • வெண் முதுகு கொண்ட வல்லூறு – மிக அருகிய இனம்
    • மெல்லிய உடலமைப்பு கொண்ட வல்லூறு – மிக அருகிய இனம்
    • நீண்ட உடலமைப்பு கொண்ட வல்லூறு – மிக அருகிய இனம்
    • எகிப்திய வல்லூறு – அருகிய இனம்
    • சிவப்புத் தலை கொண்ட வல்லூறு – மிக அருகிய இனம்
    • இந்திய கிரிப்போன் வல்லூறு – கவலை குறைந்த இனம்
    • இமயமலை கிரிப்பொன் வல்லூறு – விரைவில் அச்சுறுத்தலுக்கு உள்ளாகும் நிலை
    • சினோரியஸ் வல்லூறு – விரைவில் அச்சுறுத்தலுக்கு உள்ளாகும் நிலை
    • எலும்புண்ணி வல்லூறு – விரைவில் அச்சுறுத்தலுக்கு உள்ளாகும் நிலை

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்