TNPSC Thervupettagam

வளமைக்கான சிலை

November 19 , 2022 610 days 269 0
  • பெங்களூரு சர்வதேச விமான நிலையத்தின் வளாகத்திற்குள் பெங்களூரு நகர நிறுவனரான கெம்பே கவுடாவின் சிலையினைப் பிரதமர் திறந்து வைத்தார்.
  • வளமைக்கான சிலை என்பது பிரகதிய பிரதிமே என்றும் அறியப்படுகின்றது. 
  • இந்தச் சிலை என்பது ஒரு நகரத்தை நிறுவியத் தலைவருக்கான முதலாவது மற்றும் உயரமான வெண்கலச் சிலை என்ற வகைக்காக உலக சாதனைப் புத்தகத்தில் இடம் பெற்ற ஒரு சாதனையினைக் கொண்டுள்ளது.
  • நாடபிரபு ஹிரியா கெம்பேகவுடா விஜயநகரப் பேரரசைச் சேர்ந்த, 16 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஒரு படைத் தலைவர் ஆவார்.
  • இவர் 1537 ஆம் ஆண்டில் விஜயநகரப் பேரரசான அச்சுத ராயரிடமிருந்து அனுமதி பெற்று பெங்களூர் கோட்டையையும், நகரத்தையும் கட்டினார்.
  • இவர் தெலுங்கு மொழியில் ஒரு யக்சகானா நாடகமான கங்கா கௌரி விலாசம் என்பதை இயற்றினார்.
  • ஒற்றுமைக்கான சிலையை வடிவமைத்தச் சிற்பியான ராம் வி சுதர் என்பவரால் இந்த சிலை கருத்துருவாக்கம் செய்யப்பட்டு வடிவமைக்கப் பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்