TNPSC Thervupettagam

வளர்க்கப்படும் யானைகளின் மரபணு விவரக் குறிப்பு

April 10 , 2024 228 days 265 0
  • கேரளாவில் தனியாரால் வளர்க்கப்படும் 400க்கும் மேற்பட்ட யானைகளின் மரபணு விவரக் குறிப்பு சேமிப்பு நடவடிக்கையானது விரைவில் தொடங்க உள்ளது.
  • இந்திய வனவிலங்கு நிறுவனம் (WII) ஆனது, யானைகளின் விவரங்களை தேசிய தரவுத் தளத்தில் சேர்ப்பதற்கான விவரக் குறிப்பு சேகரிப்பை மேற்கொள்ள உள்ளது.
  • இது கேரள வனத்துறைக்கு தடயவியல் கருவிகளை வழங்கியுள்ளது.
  • தனியாரால் வளர்க்கப்படும் யானைகளை மாநிலங்களுக்குள்ளும் மாநிலங்களுக்கி இடையேயும் இடம் மாற்றுவதைக் கண்காணிப்பதற்காக வேண்டி இந்த விவரக்குறிப்பு மேற்கொள்ளப்படுகிறது.
  • கேரளாவில் ஆண்டிற்கு 25 யானைகள் உயிரிழக்கின்றன.
  • அம்மாநிலத்தில் தனியாரால் வளர்க்கப்படும் யானைகளின் எண்ணிக்கை இதுவரை இல்லாத அளவுக்கு 407 என்ற குறைந்த அளவை எட்டியுள்ளது.
  • கேரளா மாநிலமானது, ஒரு காலத்தில் தனியாரால் வளர்க்கப்படும் யானைகளின் அதிக எண்ணிக்கை கொண்ட மாநிலமாக கருதப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்