கேரளாவில் தனியாரால் வளர்க்கப்படும் 400க்கும் மேற்பட்ட யானைகளின் மரபணு விவரக் குறிப்பு சேமிப்பு நடவடிக்கையானது விரைவில் தொடங்க உள்ளது.
இந்திய வனவிலங்கு நிறுவனம் (WII) ஆனது, யானைகளின் விவரங்களை தேசிய தரவுத் தளத்தில் சேர்ப்பதற்கான விவரக் குறிப்பு சேகரிப்பை மேற்கொள்ள உள்ளது.
இது கேரள வனத்துறைக்கு தடயவியல் கருவிகளை வழங்கியுள்ளது.
தனியாரால் வளர்க்கப்படும் யானைகளை மாநிலங்களுக்குள்ளும் மாநிலங்களுக்கி இடையேயும் இடம் மாற்றுவதைக் கண்காணிப்பதற்காக வேண்டி இந்த விவரக்குறிப்பு மேற்கொள்ளப்படுகிறது.
கேரளாவில் ஆண்டிற்கு 25 யானைகள் உயிரிழக்கின்றன.
அம்மாநிலத்தில் தனியாரால் வளர்க்கப்படும் யானைகளின் எண்ணிக்கை இதுவரை இல்லாத அளவுக்கு 407 என்ற குறைந்த அளவை எட்டியுள்ளது.
கேரளா மாநிலமானது, ஒரு காலத்தில் தனியாரால் வளர்க்கப்படும் யானைகளின் அதிக எண்ணிக்கை கொண்ட மாநிலமாக கருதப்பட்டது.