TNPSC Thervupettagam

வளர்ச்சியை விட உயர்ந்த இலட்சியங்கள்

April 10 , 2019 2059 days 564 0
  • வளர்ச்சியை விட உயர்ந்த இலட்சியங்கள் என்பது ஐக்கிய நாடுகளின் ஆசியா மற்றும் பசிபிக் ஆகியவற்றிற்கான பொருளதாரம் மற்றும் சமூக ஆணையத்தால் (UNESCAP - UN Economic and Social Commission for Asia and the Pacific) வெளியிடப்படும் ஒரு வருடாந்திர அறிக்கையாகும்.
  • இந்த அறிக்கையின்படி, நீடித்த வளர்ச்சி இலக்குகளை அடைவதற்காக வறுமையை ஒழிப்பதற்கு 2030 ஆம் ஆண்டு வரை ஒரு நாளைக்கு ஒரு நபருக்கு 2 டாலரை (ரூ 140) இந்தியா செலவிட வேண்டும்.
  • 2014 ஆம் ஆண்டின் “வறுமை மீதான சி. ரங்கராஜன் குழுவின்” அறிக்கையின்படி இந்தியாவானது ஏறத்தாழ 363 மில்லியன் அளவிற்கு வறுமையில் வாழும் மக்களைக் கொண்டுள்ளது.
UNESCAP
  • ESCAP என்பது ஆசியா-பசிபிக் பிராந்தியத்திற்கான ஐக்கிய நாடுகளின் பிராந்திய வளர்ச்சி நிறுவனமாகும்.
  • இது 1947 ஆம் ஆண்டில் ஏற்படுத்தப்பட்டது. இதன் தலைமையிடம் தாய்லாந்தின் பாங்காக்கில் உள்ளது.
  • UNESCAP-ன் நிறுவனர் உறுப்பினர்களில் இந்தியாவும் ஒன்று ஆகும்.
  • UNESCAP ஆனது ஐக்கிய நாடுகள் பொருளாதார மற்றும் சமூக ஆணையத்தின் கீழ் இயங்குகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்