சர்வதேச நாணய நிதியத்தின் (International Monetary Fund - IMF) தலைமைப் பொருளாதார அறிஞரான கீதா கோபிநாத் என்பவர் 2019-20 ஆம் நிதியாண்டிற்கான இந்தியாவின் வளர்ச்சி விகிதத்தை 7.7 சதவிகிதத்திலிருந்து 7.5 சதவிகிதமாக குறைத்துக் கணக்கிட்டுள்ளார்.
இவர் உண்மையான மொத்த உள்நாட்டு உற்பத்தியை கணக்கிடுவதற்காக பயன்படுத்தப்படும் அடிப்படை ஆண்டு அல்லது பணவாட்டக் காரணி குறித்துக் கருத்து தெரிவித்துள்ளார். மேலும் இவர் அரசினால் வெளியிடப்படும் புள்ளியியலில் வெளிப்படைத் தன்மை இருக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
இந்தியா IMF-ன் சிறப்புத் தரவு வழங்கல் தரத்திற்கு ஒரு உறுப்பினராக உள்ளது.
இந்தியாவில் புள்ளியியல்
மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கத் துறை அமைச்சகமானது (Ministry of Statistics and Programme Implementation - MOSPI) புள்ளியியல் தொடர்பாக அனைத்தையும் உள்ளடக்கிய மற்றும் தரங்கள் குறித்த அறிக்கையை வெளியிடுகின்றது.
இது புள்ளியியல் துறை மற்றும் திட்டம் அமலாக்கத் துறை ஆகியவை இரண்டும் இணைந்த பின்பு 1999 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது.
தேசியப் புள்ளியியல் அலுவலகம் (National Statistical Office - NSO) என்று அழைக்கப்படும் புள்ளியியல் பிரிவானது பின்வருவனவற்றைக் கொண்டிருக்கும்.
தேசியப் புள்ளியியல் அலுவலகம் (Central Statistics Office - CSO)
தேசிய மாதிரி ஆய்வு அலுவலகம் (The National Sample Survey Office - NSSO)
கணினி மையம்
திட்டம் செயல்படுத்துதல் துறையானது பின்வரும் மூன்று பிரிவுகளைக் கொண்டுள்ளது.
இருபது அம்சத் திட்டம்
கட்டமைப்பை மேற்பார்வையிடுதல் மற்றும் திட்டத்தை மேற்பார்வையிடுதல்
பாராளுமன்ற உறுப்பினரின் உள்ளூர் பகுதி வளர்ச்சித் திட்டம் (MPLADs - Members of Parliament Local Area Development Scheme).