வளர்ச்சி மற்றும் அமைதிக்கான சர்வதேச விளையாட்டு தினம் - ஏப்ரல் 06
April 20 , 2018 2410 days 822 0
வளர்ச்சி மற்றும் அமைதிக்கான சர்வதேச விளையாட்டு தினம் (International Day of Sport for Development and Peace- IDSDP) ஆண்டுதோறும் ஏப்ரல் 6-ஆம் தேதி கொண்டாடப்படுகின்றது.
சமூக மாற்றம் மற்றும் சமுதாய வளர்ச்சியை முன் நடத்திச் செல்வதற்கும், மக்களிடையே அமைதி மற்றும் புரிதலை வளர்ப்பதற்கும் விளையாட்டிற்கு உள்ள ஆற்றலை கொண்டாடுவதற்குமான வருடாந்திர அனுசரிப்பே இத்தினமாகும்.
2013 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 23 ஆம் தேதியன்று வளர்ச்சி மற்றும் அமைதிக்கான சர்வதேச விளையாட்டு தினம் ஆண்டுதோறும் ஏப்ரல் 6-ஆம் தேதியன்று கொண்டாடப்படும் என ஐ. நா பிரகடனப்படுத்தியது.
1896-ஆம் ஆண்டு கிரீஸ் நாட்டின் ஏதேன்ஸ் நகரில் முதல் நவீன ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் (first modern Olympic Games) தொடங்கியதை இத்தினம் குறிக்கின்றது.