TNPSC Thervupettagam

வளிமண்டல அலைகள் பரிசோதனைத் திட்டம்

March 2 , 2019 1968 days 593 0
  • நமது கிரகத்தைச் சுற்றிலும் இருக்கும் மிகப்பரந்த தட்பவெப்ப அமைப்பை முன்கூட்டியே கணித்து அறிந்து கொள்ள அறிவியலாளர்களுக்கு உதவிடுவதற்காக 42 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான திட்டம் ஒன்றை நாசா தேர்ந்தெடுத்திருக்கின்றது.
  • இந்த திட்டம் வளிமண்டல அலைகள் பரிசோதனைத் திட்டம் என்று பெயரிடப்பட்டிருக்கின்றது. இது 2022 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் செலுத்தப்பட திட்டமிடப்பட்டிருக்கின்றது.
  • இத்திட்டம் உயர் வளிமண்டல அடுக்கில் விண்வெளியின் தட்ப வெப்பநிலையை எந்த கூட்டணியின் விசைகள் முடுக்குகின்றன என்பதை அறிய புவியின் வளிமண்டல அடுக்கில் காற்று ஒளிர்வு என அறியப்படும் வண்ணமயமான ஒளிப் பட்டைகளின் மீது கவனம் செலுத்தும்.
  • விண்வெளியில் விண்வெளி வீரர்கள் மற்றும் தொழில்நுட்பத்தைப் பாதிக்கின்ற, வானொலி தொடர்புகளைத் துண்டிக்கின்ற மற்றும் மின்விநியோக அமைப்புகள் மீது தனது மிகப்பெரும் பாதிப்பை ஏற்படுத்துகின்ற வகையில் மிகுதியான தீவிரமான தாக்குதல்களைக் காண முடிவதால் விண்வெளித் தட்பவெப்பநிலை மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகும்.
  • மேலும் நாசாவானது ஏழு மாத கால அளவிற்கு சன் ரேடியோ விண்வெளி பரிசோதனைக்கான தலையீட்டுமானியையும் (Sun Radio Interferometer Space Experiment -SunRISE) தேர்ந்தெடுத்திருக்கின்றது.
  • ஒரு மிகப்பெரிய ரேடியோ தொலைநோக்கி போல செயல்படும் ஆறு கியூப்சாட்களின் வரிசையாக இது இருக்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்