TNPSC Thervupettagam

வளிமண்டல ஆக்ஸிஜன் இல்லா உந்து விசைத் தொழில்நுட்பம்

March 12 , 2021 1264 days 538 0
  • சமீபத்தில் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பானது (DRDO - Defence Research and Development Organisation) வளிமண்டல ஆக்ஸிஜன் பயன்பாடு இல்லாத உந்து விசைத் தொழில்நுட்பத்தைச் சோதனை செய்துள்ளது.
  • இந்த வடிவமைப்பானது மும்பை நிலப் பகுதியில் சோதனை செய்யப்பட்டது.
  • இது இந்தியக் கடற்படையைச் சேர்ந்த நீர்மூழ்கிக் கப்பல்கள் நிலப் பகுதிகளுக்குச் சென்று தங்களது மின்கலத்திற்கு மின்னேற்றம் செய்யாமலேயே 3 வார காலத்திற்கு இயங்க அனுமதிக்கின்றது.
  • AIP (Air Independent Propulsion) தொழில்நுட்பத்தின் மேம்பாடானது ஆத்ம நிர்பர் பாரத் பிரச்சாரத்திற்கான ஒரு மிகப்பெரிய ஊக்கமளிப்பாகும்.
  • அமெரிக்கா, பிரான்ஸ், சீனா, ஐக்கிய இராஜ்ஜியம் மற்றும் ரஷ்யா, ஆகிய நாடுகள் மட்டுமே இந்த முக்கியத் தொழில்நுட்பத்தைக் கொண்டுள்ளன.
  • DRDOவின் AIP தொழில்நுட்பமானது பாஸ்பாரிக் அமில எரிபொருள் கலத்தை (Phosphoric Acid Fuel Cell) அடிப்படையாகக் கொண்டதாகும்.
  • கடைசி 2 கல்வாரி வகுப்பைச் சேர்ந்த நீர்மூழ்கிக் கப்பல்கள் இதனால் இயக்கப் பட இருக்கின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்