வன் துணியாடை (ஜீன்ஸ்), முழங்கால் வரையிலான காற்சட்டை (கேப்ரிஸ்) மற்றும் முழங்கால் வரையிலான இறுக்கமான காற்சட்டை (லெக்கின்ஸ்) போன்றவற்றை நீதிமன்றங்களுக்கு அணிந்து வரக்கூடாது என்று தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்குரைஞர் (BCTNP) கழகங்கள் அதன் உறுப்பினர்களுக்கு எச்சரித்துள்ளது.
பொதுவாக நீதிமன்றத்தின் முன் ஆஜராகக் கூடிய வகையிலேயே அனைத்து வழக்கறிஞர்களும் நீதிமன்றங்களுக்கு முறைப்படி வருகை புரிய வேண்டும்.
பரிந்துரைக்கப்பட்ட ஆடை நெறிமுறைகளை மீறுவது தொழில்முறை சார்ந்த தவறான நடத்தையாக கருதப்பட்டு 1961 ஆம் ஆண்டு வழக்கறிஞர்கள் சட்டத்தின் 35வது பிரிவின் கீழ் தண்டனை வழங்கப்படும்.