TNPSC Thervupettagam

வழிவகைக்கான முன்பணம்

April 3 , 2020 1571 days 527 0
  • மத்திய வங்கியிடம் இருந்து அரசாங்கம் பெறும் குறுகிய காலக் கடனுக்கான வரம்பை இந்திய ரிசர்வ் வங்கி உயர்த்தியுள்ளது.
  • “வழி வகைக்கான முன்பணம்” என்று அறியப்படும் கடன் வசதிக்கான வரம்பானது 2020 – 21 ஆம் ஆண்டின் முதல் பாதியில் ரூ.1.2 இலட்சம் கோடி என்ற அளவில் உயர்த்தப்பட்டது.
  • கரோனா வைரஸ் தொற்றிற்கு எதிரான போராட்டத்தில் அரசின் செலவினம் அதிகரிக்கும் என்பதைக் கருத்தில் கொண்டு இந்த வரம்பு அதிகரிக்கப் பட்டுள்ளது.
  • இந்த நிதியின் கிடைக்கும் தன்மையானது அரசின் நீண்ட காலச் சந்தைக் கடன்களை மீறிய அளவில் குறுகிய காலச் செலவினத்தை மேற்கொள்ள மத்திய அரசிற்கு வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுக்கும்.

வழி வகைக்கான முன்பணம் பற்றி (WMAWays and Means Advances)

  • இது வருமானம் மற்றும் செலவினம் ஆகிய இரண்டிற்கும் இடையிலான தற்காலிக வேறுபாடுகளைப் பூர்த்தி செய்வதற்காக மத்திய அரசிற்கு இந்திய ரிசர்வ் வங்கியினால் வழங்கப்படும் தற்காலிகக் கடன் வசதியாகும்.
  • இது மத்திய அரசின் நிதிப் பற்றாக்குறைக்கு நிதியளிப்பதற்காக 40 ஆண்டுகள் பழமையான தற்காலிகக் கருவூலப் பத்திரம் தடை செய்யப்பட்ட பின்பு, 1999 ஆம் ஆண்டு ஏப்ரல் 01 அன்று அறிமுகப்படுத்தப் பட்டது.
  • தேவை ஏற்படின், இந்திய ரிசர்வ் வங்கியிடமிருந்து உடனடியாக வழங்கப் படும் இந்த நிதியை அரசு பயன்படுத்திக் கொள்ளலாம்.
  • ஆனால், அரசு இந்த நிதியை 90 நாட்களுக்குள் திருப்பிச் செலுத்த வேண்டும். இதற்கான வட்டியானது தற்பொழுதுள்ள ரெப்போ விகிதத்தைக் கொண்டு கணக்கிடப் படுகின்றது.
  • WMA ஆனது வழக்கமான வழக்கமான WMA மற்றும் சிறப்பு WMA என இரண்டு வகைகளைக் கொண்டுள்ளது.
  • சிறப்பு WMA அல்லது சிறப்புக் கடன் பெறுதல் வசதியானது (SDF - Special Drawing Facility) மாநில அரசிடம் இருக்கும் மத்திய அரசுப் பத்திரங்களின் ஆதாரத்தைக் கொண்டு வழங்கப் படுகின்றது.
  • மாநிலத்தின் SDFன் வரம்பானது முழுவதும் தீர்ந்த பின்னர் வழக்கமான WMAஐ மாநிலம் பயன்படுத்திக் கொள்ளும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்