TNPSC Thervupettagam

வாகன எரிபொருள் மீதான கலால் வரி

July 24 , 2021 1093 days 497 0
  • 2021 ஆம் நிதி ஆண்டில் மத்திய அரசின் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரி வசூலானது ரூ.3.35 லட்சம் கோடியை எட்டியுள்ளது.
  • 2020 ஆம் நிதி ஆண்டில் இது ரூ.1.78 லட்சம் கோடியாக இருந்தது.
  • இதில் பெட்ரோல் மற்றும் டீசல்  மீதான கலால் வரி மட்டுமின்றி, விமான எரிபொருள், இயற்கை எரிவாயு மற்றும் கச்சா எண்ணெய் ஆகியவை மீதான கலால் வரிகளும் அடங்கும்.
  • வரி வசூலானது மேலும் அதிகமாக இருந்திருக்கும், ஆனால் கடந்த ஆண்டில் விதிக்கப் பட்ட ஊரடங்கினால் எரிபொருள் விற்பனை சரிந்துள்ளதால் அது குறைவாகவே உள்ளது.
  • 2020 ஆம் ஆண்டின் மார்ச் மாத இறுதி மற்றும் மே மாதத்திற்கு இடைப்பட்ட காலத்தில் பெட்ரோலுக்கான கலால் வரியை லிட்டருக்கு 13 ரூபாயாகவும் டீசலுக்கான கலால் வரியை லிட்டருக்கு  16 ரூபாயாகவும் மத்திய அரசு உயர்த்தியுள்ளது.
  • சில மாநிலங்களில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 100 ரூபாய்க்கு அதிகமாகவும் டீசல் விலை லிட்டருக்கு 90 ரூபாய்க்கு அதிகமாகவும் விற்கப் படுவதற்குக் காரணம் அதிக வரி விதிப்பே அன்றி கச்சா எண்ணெயின் விலை உயர்வு அல்ல.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்