TNPSC Thervupettagam

வாக்காளர்கள் சரிபார்க்கும் காகித தணிக்கை சோதனை கருவி

September 30 , 2017 2673 days 1045 0
  • இந்திய தேர்தல் ஆணையம் இந்த ஆண்டு முடிவில் வரவிருக்கும் குஜராத் சட்டமன்ற பொதுத்தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தோடு வாக்காளர்கள் சரிபார்க்கும் காகிதத் தணிக்கை சோதனைக் கருவியை (VVPAT- Voter - Verified Paper Audit Trail.) பயன்படுத்த திட்டமிட்டுள்ளது.
  • VVPAT பொருத்தப்பட்ட EVM இயந்திரங்களுடன் ஒரு பெரிய மாநிலத்தின் தேர்தலை நடத்துவது இதுவே முதல் முறை ஆயினும், மாநிலங்களை கணக்காகக் கொண்டால், கோவாவிற்கு அடுத்து இரண்டாவது மாநிலமாக குஜராத்தில் இம்முறையில் தேர்தல் நடத்தப்படவுள்ளது.VVPAT - ஓர் பார்வை
    • VVPAT = Voter - Verified Paper Audit Trail.
    • இது வாக்காளர்கள் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் வாக்களித்த உடன் அவர்கள் வாக்களித்த வேட்பாளர்களின் பெயர் மற்றும் சின்னங்கள் அடங்கிய தகவல்கள் கொண்ட, வாக்காளர்களுக்கு 10 நொடிகள் மட்டுமே புலப்படும் ஓர் காகித ஆவணமாகும். பின் இது தானாக பாதுகாக்கப்பட்ட மற்றும் உறையிடப்பட்ட பேழையில் சேகரிக்கப்படும். இது நீதி மற்றும் நியாயமான தேர்தல் நடைபெற உதவும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்