TNPSC Thervupettagam

வாக்காளர் பட்டியலில் ஜாரவா பழங்குடியினர்

December 3 , 2024 30 days 96 0
  • இந்தியாவின் தேர்தல் செயல்முறை வரலாற்றில் முதன்முறையாக, ஜாரவா பழங்குடி இனத்தைச் சேர்ந்த 19 உறுப்பினர்கள் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
  • ஜாரவாக்கள் மத்திய அந்தமான் மற்றும் தெற்கு அந்தமான் தீவுகளின் மேற்குக் கடற் கரையில் வசிப்பவர்கள் ஆவர்.
  • இந்தப் பழங்குடியினருடனான முதல் நட்பார்ந்தத் தொடர்பு ஆனது 1974 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது.
  • ஜாரவாக்கள் வேட்டையாடுதல் மற்றும் உணவு சேகரிப்பதைத் தொழிலாக கொண்ட நாடோடிப் பழங்குடியினராக உள்ளனர்.
  • அவர்கள் வில் மற்றும் அம்புகளை கருவிகளாகக் கொண்டு காட்டுப் பன்றிகள் மற்றும் உடும்புகளை வேட்டையாடுகிறார்கள்.
  • இவர்கள், ஓங்கேஸ் மற்றும் அந்தமானியர்கள் போல் வேட்டையாட என்று நாய்களைப் பயன்படுத்துவதில்லை.
  • 2011 ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி, ஜாரவாக்களின் மக்கள் தொகை 380 ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்