வாக்காளர் பட்டியல்களின் சிறப்பு விரைவு திருத்தம், 2025 – தமிழ்நாடு
January 9 , 2025 2 days 50 0
2025 ஆம் ஆண்டு புகைப்படங்களுடன் கூடிய வாக்காளர் பட்டியல்களின் சிறப்புத் திருத்தத்தின் ஒருங்கிணைந்த இறுதிப் பதிப்பு ஆனது வெளியிடப்பட்டது.
சமீபத்தில் இது தமிழ்நாட்டின் தலைமை தேர்தல் அதிகாரியான அர்ச்சனா பட்நாயக் என்பவரால் வெளியிடப் பட்டது
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதல் தமிழகத்தின் வாக்காளர் பட்டியலில் 9 லட்சம் கூடுதல் வாக்காளர்கள் பட்டியலிடப்பட்டுள்ளனர்.
ஜனவரி 05 ஆம் தேதி நிலவரப்படி, தமிழக வாக்காளர்களின் எண்ணிக்கை 6.36 கோடியாக இருந்தது.
6.36 கோடி வாக்காளர்களில் 3.24 கோடி பேர் பெண்கள், 3.11 கோடி பேர் ஆண்கள், 9,120 பேர் மூன்றாம் பாலினத்தவர் ஆவர்.
6.90 லட்சம் வாக்காளர்களுடன் அதிக எண்ணிக்கையிலான வாக்காளர்களைக் கொண்ட சட்டமன்றத் தொகுதியாக சோழிங்கநல்லூர் தொடர்கிறது.
கவுண்டம்பாளையம் (கோயம்புத்தூர்) 4.91 லட்சம் வாக்காளர்களுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது.
நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் இதில் 1.76 லட்சம் நபர்களுடன் மிகவும் குறைந்த வாக்காளர்கள் உள்ள தொகுதி என்ற இடத்தில் உள்ள நிலையில் இதனைத் தொடர்ந்து சென்னையின் துறைமுகம் தொகுதி உள்ளது
3,740 வெளிநாடுவாழ் வாக்காளர்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர் மற்றும் 4,78,007 மாற்றுத் திறனாளிகள் (PwD) இப்பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.
இப்பட்டியலின் திருத்தக் காலத்தின் போது சேர்க்கப்படுவதற்காக பெறப்பட்ட மொத்த விண்ணப்பங்களில், 18 முதல் 19 வயதுக்குட்பட்ட 4,10,069 வாக்காளர்கள் பதிவு செய்யப் பட்டுள்ளனர்.