முதன்முறையாக, பீகார் மாநிலத்தில் நடைபெறவுள்ள ஒரு சட்டமன்றத் தேர்தலைக் கருத்தில் கொண்டு, இந்தியத் தேர்தல் ஆணையம் (ECI) ஆனது பீகார் மாநிலத்தின் அரசியல் கட்சிகளைச் சேர்ந்த வாக்குச்சாவடி நிலை முகவர்களுக்கு (BLAs) பயிற்சி அளிக்கத் தொடங்கியுள்ளது.
வாக்காளர் விதிகளின் பதிவு, 1960; தேர்தல் நடத்தை விதிகள், 1961, 1950 மற்றும் 1951 ஆம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தில் நன்கு விவரிக்கப்பட்டுள்ளபடி, இந்தப் பயிற்சித் திட்டம் ஆனது அவர்களின் சில பொறுப்புகளை நிறைவேற்ற உதவும் என்று ஆணையம் கூறியது.
வாக்குச்சாவடி நிலை முகவர்கள் என்போர் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளால் நியமிக்கப் படுகிறார்கள் என்பதோடு, 1950 ஆம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் சில விதிகளின்படி பிழையற்ற ஒரு வாக்காளர் பதிவுப் பட்டியலை உறுதி செய்வதில் முக்கியப் பங்கு வகிக்கின்றனர்.
வாக்குச்சாவடி நிலை முகவர்கள் வெளியிடப்பட்ட அந்த இறுதி வாக்காளர் பட்டியலில் ஏதேனும் குறை இருந்தால், 1950 ஆம் ஆண்டு RP சட்டத்தின் 24(a) மற்றும் 24(b) ஆகியப் பிரிவுகளின் கீழ் முதல் மற்றும் இரண்டாவது முறையீடுகளைப் பயன்படுத்துவதில் அவர்கள பயிற்சி பெறுகின்றனர்.