TNPSC Thervupettagam

வாக்குப்பதிவில் குறைந்து வரும் பாலின இடைவெளி

April 27 , 2024 83 days 200 0
  • பொதுத் தேர்தல்களில் தொடர்ந்து மூன்றாவது முறையாகப் பெண் வாக்காளர்கள் ஆண்களை விட சற்றே அதிக விகிதத்தில் தங்கள் வாக்குரிமையைப் பயன்படுத்தி உள்ளனர்.
  • கடந்த காலத்தில் தமிழகத்தின் வாக்குப்பதிவு விகிதத்தில் பரவலாக இருந்து வந்த பாலின இடைவெளி ஆனது குறைந்து வருவதை இது சுட்டிக் காட்டியுள்ளது.
  • ஆண்களின் வாக்குப்பதிவானது, 1951-52 ஆம் ஆண்டு நடைபெற்ற முதலாவது மக்களவை தேர்தலிலிருந்து, பல தசாப்தங்களாக பெண்களின் வாக்குப் பதிவினை விட ஒப்பீட்டளவில் அதிகமாக இருந்தது.
  • 1980 ஆம் ஆண்டில், மாநிலத்தின் வாக்காளர்கள் எண்ணிக்கை 2.81 கோடி ஆகும். அவர்களில் 1.40 கோடி பெண்கள் ஆவர்.
  • 2024 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில், வாக்காளர்கள் எண்ணிக்கை 6.23 கோடியாக இருந்தனர் என்ற நிலையில் அவர்களில் 3.1 கோடி பேர் பெண்கள் ஆவர்.
  • 2009 ஆம் ஆண்டு வரை, பொதுத் தேர்தல்களில் தங்கள் வாக்குரிமையைப் பயன்படுத்திய பெண்கள் மற்றும் ஆண்கள் ஆகியோர் மீதான சதவீதத்தின் அடிப்படையில் குறிப்பிடத் தக்க அளவில் பாலின இடைவெளி இருந்தது.
  • இருப்பினும், முதன்முறையாக, 2014 ஆம் ஆண்டு தேர்தலில், பெண் வாக்காளர்கள் எண்ணிக்கையானது ஆண் வாக்காளர் எண்ணிக்கையினை மிகக்குறைந்த வாக்கு வித்தியாசத்தில் மிஞ்சியது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்