TNPSC Thervupettagam

வாசினார் கூட்டமைப்பில் இந்தியா

December 9 , 2017 2572 days 855 0
  • பொதுமக்கள் நலத்திற்காக பயன்படுத்தப்படும் பொருட்கள் அல்லது தொழில்நுட்பங்களை இராணுவத்திலும் பயன்படுத்தப்படுவது இரட்டை பயன்பாடு தொழில்நுட்பம் (Dual use Technology) என்று அழைக்கப்படுகிறது.
  • இத்தகைய இரட்டை பயன்பாட்டு தொழில்நுட்பங்கள் மற்றும் பொருட்களின் வர்த்தகம் மற்றும் பயன்பாட்டை ஒழுங்குமுறைப்படுத்தும் வாசினார் கூட்டமைப்பில் (Wassenaar Arrangement) இந்தியா இணைந்துள்ளது. இந்தியா வாசினார் கூட்டமைப்பில் சேரும் 42-ஆவது உறுப்பினர் ஆகும்.
  • வாசினார் அமைப்பில் உள்ள அனைத்து உறுப்பினர்களும் பங்குபெற்ற இரண்டு நாள் சந்திப்பு ஆஸ்திரியா நாட்டிலுள்ள வியன்னா நகரில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தின்போது இந்தியாவை கூட்டமைப்பில் இணைக்கும் முடிவு எடுக்கப்பட்டது.
  • இக்கூட்டமைப்பில் இந்தியா உறுப்பினர் தகுதியைப் பெற்றிருப்பது இந்திய தொழில் நிறுவனங்களுக்கு உயர் தொழில்நுட்பங்கள் கிடைப்பதற்கும், பாதுகாப்பு மற்றும் விண்வெளித் துறையில் உயர் தொழில்நுட்பங்களை பெறுவதற்கும் வழிவகை செய்யும்.
  • 48 உறுப்பினர் நாடுகளைக் கொண்ட அணுவாற்றல் வழங்குனர் குழுவில் (Nuclear Supplier Group - NSG) இந்தியா நுழைவதற்கு வாசினார் கூட்டமைப்பு உறுப்பினர் தகுதி வலுவாக வாதிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
  • சமீபத்தில் 2016ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் ஏவுகணைத் தொழில்நுட்ப கட்டுப்பாட்டு அமைப்பில் இந்தியா இணைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்