2011 ஆம் ஆண்டில் விசாரணை நீதிமன்றம் வழங்கிய தண்டனை மற்றும் தீர்ப்புகளுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட அனைத்து குற்றவியல் மேல்முறையீட்டு வழக்குகளையும் சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
1992 ஆம் ஆண்டில் தருமபுரி மாவட்டத்தில் உள்ள வாச்சாத்தி பழங்குடியினக் கிராமத்தில் வசிப்பவர்கள் மீது நடத்தப்பட்ட கொடூர சம்பவங்களுக்காக அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டது.
1995 ஆம் ஆண்டில் சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் மத்தியப் புலனாய்வுப் பிரிவு இந்த வழக்கினை விசாரித்தது.
2011 ஆம் ஆண்டு செப்டம்பர் 29 ஆம் தேதியன்று, விசாரணை நீதிமன்றமானது எஞ்சியிருக்கும் 215 குற்றம் சாட்டப்பட்ட நபர்களைக் குற்றவாளிகள் என்று தீர்ப்பு அளித்தது.