TNPSC Thervupettagam

வாடகைத் தாய் (ஒழுங்குமுறை) விதிகள், 2023

October 31 , 2023 264 days 387 0
  • ஒரு சட்டத்தின் நடவடிக்கைக்குத் தடை விதித்து, அரிய மருத்துவ நோயால் பாதிக்கப்பட்ட பெண்ணின் தாய்மைக்கான உரிமையை உச்ச நீதிமன்றம் பாதுகாத்து உள்ளது.
  • சிக்கலான உடல்நிலை காரணமாக, மனுதாரப் பெண்ணினால் தனது உடலில் கரு முட்டைகள் /அண்ட செல்களை உற்பத்தி செய்ய முடியவில்லை.
  • அவர் மேயர் ரோகிடான்ஸ்கி குஸ்டர் ஹவுசர் (எம்ஆர்கேஎச்) நோய்க்குறி எனப்படும் அரிய நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார்.
  • ஆனால், இந்த ஆண்டு மார்ச் 14 ஆம் தேதியன்று வெளியிடப்பட்ட ஒரு அரசாங்க அறிவிப்பில், ஒரு சட்டத்தினைத் திருத்தியமைத்து தானம் செய்யப்படும் பாலணுக்களைப் (கேமிட்) பயன்படுத்துவதைத் தடை செய்வதாக அறிவிக்கப்பட்டது.
  • "திருமணமான தம்பதிகள்" வாடகைத் தாய் மூலம் குழந்தை பெறுவதற்கு தங்கள் சொந்த பாலணுக்களைப் பயன்படுத்த வேண்டும் என்று இந்த திருத்தத்தில் கூறப் பட்டது.
  • பெண்களின் தாய்மைக்கான உரிமையை மீறும் இந்த சட்டத் திருத்தத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
  • 2023 ஆம் ஆண்டு திருத்தமானது, 2021 ஆம் ஆண்டு வாடகைத் தாய்ச் சட்டத்தின் 2(r) மற்றும் 4 ஆகிய சட்டப் பிரிவுகளுக்கு முரணானது.
  • இந்தச் சட்டப் பிரிவுகள், ஒரு மோசமான மருத்துவப் பிரச்சினையின் போது, பெற்றோர் ஆவதற்காக ஓர் இணையர் வாடகைத் தாய் முறையைத் தேர்வு செய்யலாம் என்பதை அங்கீகரித்துள்ளது.
  • கர்ப்பக் கால வாடகைத் தாய் செயல்முறையினைத் தொடர அனுமதிக்கின்ற 14(a) எனும் சட்டப் பிரிவின் படி, அந்த முறை மூலமாகப் பிறக்கும் குழந்தை கணவனுடன் மரபணு ரீதியாக தொடர்புடையதாக கருதப்படும் என்று உச்ச நீதிமன்றம் விளக்கியது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்