மாசுபடுத்துதல் இல்லாத வகையிலான நகர்ப்புறப் போக்குவரத்தினை மேம்படுத்தச் செய்வதற்காக 2018 ஆம் ஆண்டில் பாரீஸ் நகரில் மின்சார ஸ்கூட்டர்கள் அறிமுகப் படுத்தப் பட்டன.
ஆனால் இங்கு இரு சக்கர வாகனங்களின் எண்ணிக்கை பெருகியதால் விபத்துகளும் அதிகரித்தன.
2022 ஆம் ஆண்டில், பாரீஸ் நகரில் மின்சார ஸ்கூட்டர் விபத்துகளில் மூன்று பேர் இறந்தனர் மற்றும் 459 பேர் காயமடைந்தனர்.
ஜனவரி மாதத்தில் பாரீஸ் நகரத் தெருக்களில் மின்சார ஸ்கூட்டர்களைப் பயன் படுத்துவதற்குத் தடை செய்வது குறித்த பொது வாக்கெடுப்பினை மேயர் அறிவித்தார்.
இதன்படி மொத்தம் 89 சதவீத வாக்காளர்கள் முன்மொழியப்பட்ட இந்தத் தடைக்கு ஆதரவாகவும் 11 சதவீதம் பேர் எதிராகவும் வாக்களித்தனர்.
2023 ஆம் ஆண்டு செப்டம்பர் 01 ஆம் தேதிக்குள் மின்கலங்களில் இயங்கும் இந்த வாகனங்களின் பயன்பாட்டினைப் பாரீஸ் நகரம் முற்றிலுமாக அகற்ற உள்ளது.