TNPSC Thervupettagam

வாடிக்கையாளரை மையமாகக் கொண்டு மேற்கொள்ளப்பட்ட முன்னெடுப்புகள்

November 16 , 2021 1106 days 519 0
  • இந்திய ரிசர்வ் வங்கியின் வாடிக்கையாளர்களை மையப்படுத்திய இரண்டு புதிய முன்னெடுப்புகளை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்.
  • அந்த இரு முன்னெடுப்புகள் ரிசர்வ் வங்கியின் நேரடி சில்லறை விற்பனைத் திட்டம் மற்றும் ரிசர்வ் வங்கி - ஒருங்கிணைந்தக் குறைதீர்ப்புத் திட்டம் ஆகியவை ஆகும்.
  • ரிசர்வ் வங்கியின் நேரடி சில்லறை விற்பனைத் திட்டமானது சில்லறை முதலீட்டாளர்கள் அரசாங்கப் பங்குச் சந்தையை அணுகுவதை மேம்படுத்துவதை ஒரு நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இந்திய அரசு மற்றும் மாநில அரசுகள் வழங்கும் பத்திரங்களில் நேரடியாக முதலீடு செய்வதற்கான புதிய வழியை இது அவர்களுக்கு வழங்குகிறது.
  • ரிசர்வ் வங்கி-ஒருங்கிணைந்த குறைதீர்ப்புத் திட்டமானது, ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் நிறுவனங்களுக்கு எதிராக வாடிக்கையாளர் அளிக்கும் புகார்களைத் தீர்ப்பதற்கான வழிமுறைகளை மேலும் மேம்படுத்துவதை ஒரு நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இந்தத் திட்டத்தின் மையக் கருப்பொருளானது, வாடிக்கையாளர்கள் தங்கள் புகார்களைத் தெரிவிக்க ஓர் இணைய தளம், ஒரு மின்னஞ்சல் மற்றும் ஒரு முகவரியுடன் ‘ஒரே தேசம்-ஒரே நடுவம் ’ என்ற அடிப்படையிலானதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்