TNPSC Thervupettagam

வாடிக்கையாளர் மனநிறைவு குறியீடு: ராய்ப்பூர் சுவாமி விவேகானந்தா விமான நிலையம் முதலிடம்

July 16 , 2017 2687 days 1373 0
  • சத்தீஸ்கர் மாநில தலைநகர் ராய்ப்பூரில் உள்ள சுவாமி விவேகானந்தா விமான நிலையம், 49 விமான நிலையங்களினை உள்ளடக்கிய வாடிக்கையாளர் மனநிறைவு குறியீடு [Customer Satisfaction Survey: CSI] கணக்கெடுப்பில் முதலிடம் பெற்றுள்ளது.
  • இதன் அடுத்தடுத்த இடங்களை உதய்ப்பூர் (2), அமிர்தசரஸ் (3) மற்றும் டேராடூன் (4) விமான நிலையங்கள் பெற்றுள்ளன. கடந்த இரண்டு ஆண்டுகளில், ராய்ப்பூர் விமான நிலையம் ஆனது இந்த அங்கீகாரத்தை மூன்றாவது முறையாகப் பெறுகிறது.
  • வாடிக்கையாளர் மனநிறைவு குறியீடு கணக்கெடுப்பு
  • வாடிக்கையாளர் மனநிறைவு என்பது இந்திய வானூர்தி நிலைய ஆணையத்தின் (Airport Authority of India - AAI) முக்கிய செயல்திறன் நோக்கம் ஆகும்.
  • இதனை மதிப்பீடு செய்ய இந்திய வானூர்தி நிலைய ஆணையம் சுதந்திரமான அமைப்பு ஒன்றை நியமித்து வாடிக்கையாளர் மனநிறைவு குறியீடு கணக்கெடுப்பை (CSI Survey) மேற்கொள்கிறது. போக்குவரத்து, பயணிகளின் வசதிகள், தூய்மை, வாகனங்கள் நிறுத்துமிடம் போன்ற பல்வேறு அளவீடுகள் இந்தக் கணக்கெடுப்பில் அடங்கும்.
  • சுவாமி விவேகானந்தா விமான நிலையம்
  • சுவாமி விவேகானந்தா விமான நிலையமானது ராய்ப்பூர் மற்றும் நயா ராய்ப்பூர் இடையே மானா எனும் இடத்தில் அமைந்துள்ளது.
  • இந்த விமான நிலையமானது இந்தியாவின் பரபரப்பான விமான நிலையங்கள் பட்டியலில் பயணிகள் போக்குவரத்து அளவீட்டின் அடிப்படையில் 28வது இடத்திலும் "விமானங்களின்" இயக்கத்தின் அளவீட்டு அடிப்படையில் 31வது இடத்திலும் உள்ளது.
  • சுவாமி விவேகானந்தர் தம்முடைய இளம் வயதின் இரண்டு ஆண்டுகளை ராய்ப்பூரில் கழித்தார். அதன் நினைவாக ராய்ப்பூர் விமான நிலையம் என்ற பெயர் 2012ஆம் ஆண்டு முதல் சுவாமி விவேகானந்தா விமான நிலையம் என்று அழைக்கப்பெறுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்