TNPSC Thervupettagam

வாட்டர்வொர்த் திட்டம்

February 19 , 2025 8 days 55 0
  • மெட்டா என்ற நிறுவனமானது, வாட்டர்வொர்த் எனப்படுகின்ற அதன் இணையவழி இணைப்பிற்கான கடலடிக் கம்பிவடத் திட்டத்தினை அறிமுகப்படுத்தியுள்ளது.
  • சுமார் 50,000 கி.மீ நீளத்தில் அமைக்கப்பட உள்ள இந்த கம்பி வடமானது, அமெரிக்கா, இந்தியா, பிரேசில், தென்னாப்பிரிக்கா மற்றும் பிற இடங்களுக்கு மேம்பட்ட இணைய இணைப்பை வழங்கும்.
  • இது உலகின் மிக நீளமான கடலடிக் கம்பிவடத் திட்டமாக மாற உள்ளது.
  • கடலடிக் கம்பிவட இணைப்புகள் ஆனது, உலகப் பெருங்கடல்களின் வழியாக கண்டம் விட்டு கண்டம் இணைக்கப்படும் இணைய இணைப்பில் சுமார் 95 சதவீததத்திற்கும் அதிகமான பங்கைக் கொண்டிருக்கும்.
  • அவை எண்ணிமத் தொடர்பு, ஒளிப்படம் சார் அழைப்பு அனுபவங்கள், இயங்கலை பணப் பரிவர்த்தனைகள் மற்றும் பலவற்றைத் தடையின்றிச் செயல்படுத்த நன்கு வழி வகுக்கின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்