TNPSC Thervupettagam

வாட்ஸ்அப் பண வழங்கீடு

November 9 , 2020 1480 days 587 0
  • இந்திய தேசிய பண வழங்கீட்டுக் கழகமானது முகநூலிற்குச் சொந்தமான குறுஞ்செய்தி பரிமாறும் தளமான வாட்ஸ்அப்பிற்குத் தனது பண வழங்கீட்டுச் சேவையை நாட்டில் ‘தரப்படுத்தப்பட்ட’ முறையில் தொடங்க அனுமதித்துள்ளது.
  • ஐசிஐசிஐ வங்கி, இந்தியன் வங்கி, ஆக்சிஸ் வங்கி, எச்.டி.எஃப்.சி வங்கி, ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா ஆகிய ஐந்து வங்கிகளுடன் வாட்ஸ்அப் கூட்டு சேர்ந்துள்ளது.
  • இந்த ஐந்து வங்கிகளைத் தவிர, ஜியோ கொடுப்பனவு வங்கியும் இதில் சேர்க்கப் பட்டு உள்ளது.
  • ஒருங்கிணைந்த பண வழங்கீட்டு இடைமுகம் அல்லது யுபிஐ என்பது இந்திய தேசிய பண வழங்கீட்டுக் கழகம் உருவாக்கிய ஒரு உடனடி நிகழ்நேரக் கட்டண முறை ஆகும்.
  • இது ஒரு சோதனைத் திட்டமாக ஏப்ரல் 2016 ஆம் ஆண்டில் அறிமுகப் படுத்தப்பட்டது.
  • இதை இந்திய ரிசர்வ் வங்கி கட்டுப்படுத்துகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்