TNPSC Thervupettagam

வாதவன் துறைமுகத் திட்டம்

June 24 , 2024 7 days 148 0
  • மகாராஷ்டிராவில் தஹானுவுக்கு அருகில் உள்ள வாதவனில் அனைத்துப் பருவ நிலையிலும் இயங்கக் கூடிய வகையிலான ஆழ்கடல் துறைமுகத்தினை உருவாக்கச் செய்வதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
  • இந்த துறைமுகம் ஆனது, பெரிய கொள்கலன் கப்பல்களுக்கு இடமளிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
  • இது ஜவஹர்லால் நேரு துறைமுக ஆணையம் (JNPA) மற்றும் மகாராஷ்டிரா கடல்சார் வாரியம் (MMB) ஆகியவற்றால் இணைந்து கட்டமைக்கப்பட உள்ளது.
  • இதற்கான மொத்தச் செலவினம் ஆனது தோராயமாக 76,220 கோடி ரூபாய் ஆகும்.
  • முதல் கட்டம் 2029 ஆம் ஆண்டிலும், இரண்டாவது கட்டம் 2037 ஆம் ஆண்டிலும் செயல் பாட்டிற்கு கொண்டு வரப்படும் வகையில் இது இரண்டு கட்டங்களாக உருவாக்கப் படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
  • இந்தத் துறைமுகம் ஆனது, 23 மில்லியன் TEU (20-அடிக்குச் சமமான அலகுகள்) சரக்குகளைக் கையாளும் திறன் கொண்டிருக்கும்.
  • இது இயற்கை சார்ந்த பல வரம்புகள் காரணமாக இந்தியாவில் உள்ள வேறு எந்தத் துறைமுகத்திலும் இல்லாத திறன் ஆகும்.
  • இது ஒவ்வொன்றும் சுமார் 1000 மீட்டர் நீளம் கொண்ட, சுமார் 24,000 TEU அலகுகளை ஏற்றிச் செல்லும் வகையிலான உலகின் மிகப்பெரிய கப்பல்களை நிறுத்த உதவும் வகையிலான ஒன்பது கொள்கலன் கப்பல் முனையங்களைக் கொண்டிருக்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்