TNPSC Thervupettagam

வாத்தினைப் போன்ற அலகுடைய டைனோசர்

June 29 , 2023 514 days 308 0
  • புவியின் தெற்கு அரைக்கோளத்தில் இதுவரை அறியப்படாத தாவரவகை டைனோசர் இனத்தின் எச்சப் படிவங்கள் சிலியில் கண்டுபிடிக்கப் பட்டுள்ளன.
  • வாத்தினைப் போன்ற அலகுடைய டைனோசர்கள் வாழ்ந்த பகுதிகள் பற்றி நிலவி வரும் நீண்டகாலக் கருத்துகளுக்கு இது சவால் விடுக்கிறது.
  • கோன்கோகன் நானோய் என்ற இந்த உயிரினமானது 72 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னதாக தற்போது சிலி படகோனியா என்றழைக்கப்படும் கடைக்கோடி தெற்குப் பகுதியில் வாழ்ந்ததாகக் கருதப்படுகிறது.
  • மிகவும் பழமையான ஹட்ரோசார்ஸ் எனப்படும் வாத்தினைப் போன்ற அலகுடைய ஒரு வகை டைனோசர் இனங்கள் வட அமெரிக்கா, ஆசியா மற்றும் ஐரோப்பா கண்டங்களில் வாழ்ந்தன.
  • இவை 145 முதல் 66 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு, கிரெட்டேசியஸ் காலத்தில் வாழ்ந்தன.
  • சிலியில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த ஐந்தாவது வகை டைனோசரான கோன்கோகன் நானோய் உண்மையில் 2013 ஆம் ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்