July 30 , 2022
853 days
472
- குள்ளக் கோளான புளூட்டோவின் வானவில் வண்ணப் படத்தை நாசா பகிர்ந்துள்ளது.
- இப்புகைப்படங்கள் அந்தக் கிரகத்தின் பல்வேறு பகுதிகளைப் பல்வேறு பிரகாசமான வண்ணங்களில் காட்டுகின்றன.
- புளூட்டோ இயற்கையாக இந்த அளவிற்கு வண்ணமயமாகத் தெரியாது.
- இந்தப் படமானது உண்மையில், அந்தக் கோளின் தனித்துவமானப் பகுதிகளை முன்னிலைப் படுத்துவதற்காக நியூ ஹாரிசன்ஸ் கலத்தின் அறிவியலாளர்களால் உருவாக்கப் பட்டது.
- புளூட்டோ சூரியக் குடும்பத்தின் குய்ப்பர் மண்டலத்தில் அமைந்துள்ளது.
- இது நெப்டியூனின் சுற்றுப்பாதைக்கு அப்பால் உள்ள பனிக்கட்டிகளால் சூழப்பட்ட கோள்கள் அடங்கிய முப்பரிமாண வளைய வடிவிலான ஒரு பகுதியாகும்.
Post Views:
472