தொலையுணர்வி / புவி கண்காணிப்பு செயற்கைக் கோள்களின் தொடர்ச்சியான தகவல் பரிமாற்ற மற்றும் தகவல் தொடர்பு இணைப்புகளை மேம்படுத்துவதற்காக இந்தியா IDRSS என்ற அமைப்பை செலுத்த உள்ளது.
இந்திய தகவல் பரிமாற்ற செயற்கைக்கோள் அமைப்பானது (Indian Data Relay Satellite System- IDRSS) 2022ல் திட்டமிடப்பட்டுள்ள மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் திட்டத்தின் ஒரு பகுதியாக செலுத்தப்படும்.
இரண்டு IDRSS செயற்கைக் கோள்களானது கீழ்க்காண்பனவற்றுடன் தொடர்ச்சியான தகவல் தொடர்பு இணைப்பைக் கொண்டிருக்கும்.
இந்தியாவின் தொலையுணர் / புவியுணர் செயற்கைக்கோள்கள்
புவியிணக்க செயற்கைக்கோள் செலுத்து வாகனம் மார்க் III (GSLV MKIII)
இந்த இரண்டு IDRSS செயற்கைக் கோள்களும் புவிநிலை சுற்றுவட்டப் பாதையில் நிலை நிறுத்தப்படும்.
இந்திய தொலையுணர் செயற்கைக்கோள்கள் சுற்றுவரும் பாதையில் அமைந்துள்ள 80% அளவிலான இடங்களை IDRSS செயற்கைக்கோள்களால் காண முடியும்.
முன்மொழியப்பட்டுள்ள இந்த அமைப்பானது செயற்கைக் கோள்களைக் கண்காணிப்பதில் தரை நிலையங்களைச் சார்ந்துள்ள நிலைமையைக் குறைக்கும்.