இந்தியா மற்றும் கிரிஸ் நாட்டிற்கிடையே இடையே புதிய மற்றும் புதுப்பிக்கக் கூடிய ஆற்றல் துறையில் புரிந்துணர்வு ஒப்பந்தமும், வான் போக்குவரத்து சேவைகளில் ஓர் உடன்படிக்கையும் கையெழுத்திடப்பட்டுள்ளன.
இரு நாடுகளுக்கு இடையே பறக்கும் விமானங்களின் எண்ணிக்கையை முடிவு செய்ய இந்த வான்சேவை ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது.
எத்தகு தடைகள் இன்றியும் இந்தியாவின் ஆறு மெட்ரோபாலிடன் நகரங்களுக்கு கிரிஸ் நாட்டின் விமானங்களும், கிரிஸ் நாட்டிற்கு இந்திய விமானங்களும் கட்டுப்பாடுகள் அற்ற எண்ணிக்கையில் சென்று வர இந்த ஒப்பந்தம் உதவும்.
இதன் மூலம் நம்முடைய புதிய சிவில் விமானப் போக்குவரத்து கொள்கையின் கீழ் திறந்த வான் வெளிப் போக்குவரத்து (Open Sky Agreement) ஒப்பந்தம் செய்துகொள்ளப் பட்டுள்ள முதல் நாடு கிரிஸ் ஆகும்.