TNPSC Thervupettagam

வாயு பிரஹார் பயிற்சி

April 2 , 2023 474 days 299 0
  • இந்தியத் தரைப்படை மற்றும் விமானப் படை ஆகியவை இணைந்து, கிழக்குப் பிரிவில் ‘வாயு பிரஹார்’ எனப்படும் 96 மணி நேர பல்-பிரிவு வான்வழி மற்றும் நிலம் சார் பயிற்சியினை மேற்கொண்டன.
  • பல்பிரிவு சார்ந்த நடவடிக்கைகளில் ஒரு கூட்டுப் பணிக்கு வழிவகுக்கும் திட்டங்களை வகுப்பதே இதன் முக்கிய ஒரு நோக்கமாகும்.
  • பல்வேறு அமைப்புகளிடையே விரைவான இயக்கம், போக்குவரத்து மற்றும் படைகளை நிலை நிறுத்துதல் தொடர்பான ஒருங்கிணைப்பு மற்றும் ஒத்திகையானது இந்தப் பயிற்சியில் மேற்கொள்ளப்படுகிறது.
  • கிழக்கு லடாக்கில் உள்ள மெய்க் கட்டுப்பாட்டு எல்லையின் மேற்குப் பிரிவில் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான மோதல் நிலை தற்போது மூன்றாவது ஆண்டாக தொடர்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்