TNPSC Thervupettagam

வாராக்கடன்கள், மோசடி விவகாரங்கள் மற்றும் தணிக்கைக்கான RBI குழு

February 23 , 2018 2320 days 704 0
  • வாராக்கடன்களின் வகைப்பாடு, தணிக்கை செய்முறையின் செயல்திறன் மற்றும் அதிகரிக்கும் மோசடி சம்பவங்கள் போன்றவை தொடர்பான பல்வேறு விவகாரங்களை ஆராய்வதற்காக இந்திய ரிசர்வ் வங்கி நிபுணர் குழு ஒன்றை  அமைத்துள்ளது.
  • இந்திய ரிசர்வ் வங்கியின் மத்திய இயக்குநர் குழுவின் முன்னாள் உறுப்பினரானH.மலேகாம் (V.H.Malagam) இந்த நிபுணர் குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
  • RBI-ன் நிர்வாக இயக்குநரானK.மிஸ்ரா இக்குழுவின் உறுப்பினர் செயலராக நியமிக்கப்பட்டுள்ளார்.
  • நாட்டில் நிதி மோசடிகளை தவிர்ப்பதற்கான கண்காணிப்பு கட்டமைப்பினை (Supervisory Framework) வலுப்படுத்துவதற்கான RBI-ன் ஓர் முன்னெடுப்பாகவும், பஞ்சாப் நேஷனல் வங்கியில் நடைபெற்ற SWIFT (உலகளாவிய வங்கிகளுக்கிடையேயான நிதியியல் தொலை தொடர்புக்கான சங்கம் - Society for worldwide Interbank Financial Telecommunication - SWIFT) தொடர்பான 11,400 கோடி மோசடியினால் உண்டான விழிப்பாலும் இந்தக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்