1962 ஆம் ஆண்டு சீனாவுடனான போரின் போது நடைபெற்ற வாலோங் போரின் 62வது ஆண்டு நினைவு தினத்தை இந்திய இராணுவம் அனுசரித்தது.
இது துணிச்சல் மிக்க வீரர்கள் மற்றும் வாலோங் பகுதியின் குடிமக்களின் மிகப்பெரும் தியாகங்களை கௌரவிக்கிறது.
இந்தப் போர்கள் 3,000 முதல் 14,000 அடி உயரத்தில் நடைபெற்றன.
ஒரு சிறிய இந்தியப் படைப்பிரிவு ஆனது, சவாலான நிலப்பரப்பான கிபித்து, வாலோங் மற்றும் நாம்தி மும்முனை சந்திப்பில் (புலி வாய் எனப்படும் பகுதி) 27 நாட்களுக்கு சீன இராணுவத்தின் முன்னேற்றத்தை வெற்றிகரமாக தடுத்து நிறுத்தியது.