TNPSC Thervupettagam

வால்மீகி காப்பகத்தில் மீண்டும் இந்தியக் காட்டெருமை

March 13 , 2020 1722 days 606 0
  • உலகின் மிகப்பெரிய காட்டெருமை இனமான இந்தியக் காட்டெருமையானது (போஸ் கௌர்ஸ்) பீகாரின் வால்மீகி புலிகள் காப்பகத்திற்கு (Valmiki Tiger Reserve - VTR) மீண்டும் திரும்பியதோடு மட்டுமல்லாமல், புல்வெளிப் பரப்பளவு அதிகரிப்பின் காரணமாக அங்கு இனப்பெருக்கம் செய்யவும் தொடங்கியுள்ளன.
  • VTR ஆனது 1990 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் அமைக்கப்பட்டது.
  • இது பீகாரின் மேற்கு சம்பரான் மாவட்டத்தில் 899 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் பரவியுள்ளது. இது வடக்கே நேபாளத்தின் சிட்வான் தேசியப் பூங்காவையும் மேற்கே உத்தரப் பிரதேசத்தையும் எல்லையாகக் கொண்டுள்ளது.
  • 1986 ஆம் ஆண்டு முதல் இந்தியக் காட்டெருமை இனங்கள் இயற்கை பாதுகாப்பிற்கான சர்வதேச ஒன்றியத்தின் சிவப்பு பட்டியலில் ‘பாதிக்கப்படக்கூடிய’ இனங்களாகப் பட்டியலிடப் பட்டுள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்