TNPSC Thervupettagam

வால் நட்சத்திரம் C/2022 E3 (ZTF)

January 11 , 2023 558 days 370 0
  • புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட வால் நட்சத்திரம் ஆனது பூமியையும் சூரியனையும் கடந்து செல்லும் போது வெற்றுக் கண்களுக்குப் புலப்படும் என கூறப்பட்டுள்ளது.
  • இவ்வாறு இந்த வால் நட்சத்திரம் வெற்றுக் கண்களுக்குப் புலப்படுவது 50,000 ஆண்டுகளில் இதுவே முதல் முறையாகும்.
  • நமது சூரியக் குடும்பத்தின் பனி நிறைந்தப் பகுதிகளைக் கடந்தப் பிறகு அது சூரியனுக்கு மிக அருகில் வந்து பூமிக்கு மிக அருகில் கடந்து செல்லும்.
  • இந்த வால் நட்சத்திரம் ஆனது ஒரு கிலோமீட்டர் விட்டம் கொண்டதாக மதிப்பிடப் பட்டுள்ளது.
  • இந்த வால் நட்சத்திரமானது, தனது வாழ்நாளின் பெரும்பகுதியை "சூரியனிலிருந்து பூமி உள்ள தொலைவினை விட குறைந்தது 2,500 மடங்கு அதிகமான தொலைவினில்  கழிக்கிறது.
  • கடைசியாக இந்த வால் நட்சத்திரம் பூமியைக் கடந்த நிகழ்வானது, நியாண்டர் தால்கள் பூமியில் சுற்றித் திரிந்த பழைய கற்காலத்தின் போது நிகழ்ந்தது.
  • இந்த வால் நட்சத்திரமானது அடுத்து சூரியக் குடும்பத்தினுள் நுழையும் நிகழ்வானது இன்னும் 50,000 ஆண்டுகளில் நிகழும் என எதிர்பார்க்கப்படுகிறது.
  • இது 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் பூமியைக் கடந்துச் சென்ற, வெறும் வெற்றுக் கண்களுக்குப் புலப்படும் வகையிலான NEOWISE எனப்படும் ஒரு முந்தைய வால் நட்சத்திரத்தினை விட சிறியதாக இருக்கும்.
  • முன்னதாக 1997 ஆம் ஆண்டில், பேரழிவு விளைவிக்கும் திறன்கொண்ட அளவில் சுமார் 60 கிலோமீட்டர் விட்டம் கொண்ட ஹேல்-பாப் வால் நட்சத்திரமானது கடந்துச் சென்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்