TNPSC Thervupettagam

வாழ்கைச் செலவுக் குறியீடு 2018

March 22 , 2018 2441 days 783 0
  • பொருளாதார நுண்ணறிவுப் பிரிவின் (Economist Intelligence Unit’s)  “உலகளாவிய வாழ்க்கைச் செலவு 2018; எந்த உலக நகரங்கள் அதிகபட்ச வாழ்க்கைச் செலவைக் கொண்டுள்ளன” (“Worldwide cost of living 2018; Which global cities have the highest cost of living”) என்ற அறிக்கைப்படி, 133 உலக நகரங்களுள் உலகின்  ஐந்தாவது மலிவான நகரமாக (cheapest city)  பெங்களூர் உள்ளது.

  • சென்னை மற்றும் புதுதில்லி ஆகியவை  முறையே 8-வது மற்றும் 10-வது இடங்களில்  உள்ளன. இவை வாழ்வதற்கு மிகவும் மலிவான முதல் 10 நகரங்களுள் ஒன்றாகும் (Cheapest Cities).
  • போர் சூழல்களால் சிதிலமடைந்த சிரியாவின் தலைநகரமான டமாஸ்கஸ் (Damascus)   மலிவான நகரங்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. அதனைத் தொடர்ந்த  இடத்தில் தென் அமெரிக்காவில் உள்ள வெனிசூலா நாட்டின்  தலைநகரமான கராகஸ்  (Caracas) உள்ளது.
  • தொடர்ந்து ஐந்தாவது ஆண்டாக உலகின் மிகவும் செலவு மிக்க (Most expensive City)  நகரமாக சிங்கப்பூர் தொடர்கின்றது.
  • மிகவும் விலைச் செலவு மிக்க நகரங்களுள் முதலிடத்திலுள்ள சிங்கப்பூரைத் தொடர்ந்து இரண்டாவது, மூன்றாவது மற்றும் நான்காவது இடங்களில் முறையே பிரான்சின் பாரிஸ் நகரமும், சுவிட்சர்லாந்து நாட்டின் ஜீரிச் நகரமும், சீனாவின் ஹாங்காங் நகரமும் உள்ளன.
  • உலகளாவிய வாழ்க்கைச் செலவு (Worldwide Cost of Living) அறிக்கையானது ஆண்டிற்கு இருமுறை வெளியிடப்படும் பொருளாதார நுண்ணறிவுப் பிரிவின் கணக்கெடுப்பாகும்.
  • இந்த அறிக்கையானது பல்வேறு உலக நகரங்களில் நிலவுகின்ற 160 பொருட்கள் மற்றும் சேவைகளின் 400-க்கும் மேற்பட்ட தனிப்பட்ட விலைகளை ஒப்பிட்டு வெளியிடப்படுகின்றது.
  • உணவு, குடிபானம், உடைகள், வீட்டு உபயோகப் பொருட்கள், வீட்டு வாடகைகள், போக்குவரத்து, தனியார் பள்ளிகள், கேளிக்கை செலவுகள்,  போன்றவற்றினுடைய  பல்வேறு விலை அம்சங்களை ஒப்பிட்டு அதனடிப்படையில் உலக நகரங்களின்  அந்தஸ்தை இந்த அறிக்கை வெளியிடுகின்றது.
 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்